வியாழன், 28 மார்ச், 2013

முரண்

மிரளுகிற காளைக்கும்
கணிகையின் உச்சத்திற்கும்,
உறுப்பருந்தவனின்
நினைவு.

பயணம்

கடக்கும் வரை
விசுவாசமாக தான்
இருக்கின்றனர்
காதலர்கள்.

பயணம்

கடக்கும் வரை
விசுவாசமாக தான்
இருக்கின்றனர்
காதலர்கள்.

புதன், 27 மார்ச், 2013

கலை...!

சிற்பியின்
செதிலுக்காக
பிளவுபட்டு
கிடக்கின்றன
கற்சிலைகள்.

புரிதலற்ற

ரகு, "ஒன்ன போல ஒரு பொண்ணு பாரு மா என் கல்யாணத்துக்கு"
அம்மா,
சிரித்து கொண்டாள்.
கிளம்பினான்.
இயந்திரத்தனமாய் சுழன்றுவிட்டு
வரும் வழியில், கோவிலில் கடவுளை பற்றியும், கொழுக்கட்டையும் தானமாய் தந்தனர். தும்பிக்கையாள னின் சிறப்பு, தீயாய் கனன்றது.
கடவுள்- கொள்கையை உருவாக்கியவன் முட்டாளென திட்டினான்.
அம்மா முகம் பார்த்து பேசுவதை தவிர்..!

மாயாவியின் கிறுக்கல்கள்:உணர்ச்சி

என்
தனிமையின்
முயக்கம்
எதை எதையோ கிளற
நா.,
ஆழ்ந்து, சோர்ந்து
உறங்குகிறேன்.,

செவ்வாய், 26 மார்ச், 2013