நான் எடுத்துள்ள ஆறாவது குறும்படம். இதுவரை எடுத்த படங்களை இனிமேல் தான் பதிவு செய்வேன். இந்த படம் எனக்கு பிடித்த படம், காரணம் இந்த படத்தில் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தின் கூட்டணி மொத்தம் நான்கு பேர் மட்டுமே. நடிப்பு, அனிமேஷன், கேமரா மற்ற வேலைபாடுகளை எல்லாம் பார்த்தது நான் மட்டும், நான் தற்பெருமைக்காக சொல்ல வில்லை வேறு யாரும் உதவிக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன். இந்த படத்தை எனக்கு படமாக எடுக்க தோன்றியது கன்னியாகுமரி புத்தகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு இடத்தில் எழுதி இருப்பார் அவள் தோழிகளுடன் அங்கு இல்லை என்று அந்த ஒரு வார்த்தையை மையமாக கொண்டு தான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
படம் முழுக்க ஒருவரை மட்டும் வைத்து படம் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது அதற்கு தான் இந்த படம். இது ஒரு காதல் படம். எனக்கு காதல் படம் எடுக்க விருப்பம் இல்லை ஆனால் எனக்கு கிடைத்த ஆட்கள் மற்றும் பண செலவுகள் இவற்றையெல்லாம் மனதில் வைத்து தான் நான் இந்த காதல் படத்தை எடுக்க வேண்டிய நிலை, இந்த படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை, ஏனென்றால் இதுவரை காதல் படங்களுக்கு எத்தனையோ தலைப்புகளை வைத்துள்ளனர் அதனால் தான் இந்த படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை. நீங்கள் யாரையாவது காதலித்திருந்தால் அதோட வலி, கோவம் இதெல்லாம் உங்களுக்கு புரியும் அதும் காதலை சொல்லாமல் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும், அந்த சொல்லாத காதலை தான் எனக்கு பிடித்த முறையில் வீடியோவாக கிறுக்கியுள்ளேன் நண்பர்களே... நீங்கள் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் அப்போது தான் என் அடுத்த படத்தில் அதை திருத்தி கொள்ள முடியும், உங்கள் கருத்துகளை சரியோ, தவறோ மறக்காமல் குறிப்பிடவும் இப்படிக்கு உங்கள் கருத்தை கேட்டு என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கும் மாயாவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக