முத்தம். பிறந்ததிலிருந்து இறப்பதற்குள் நாம் கட்டாயம் தொட வேண்டிய ஒரு அழகான பயணம். ஒவ்வொரு பயணத்திலும் நாம எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறோம். எதை கற்றுக்கொண்டோம் என்பது நமக்கு அதை கற்றுக்கொள்ளும்போது புரியாது கற்றுக்கொண்ட பின்னர் தான் எதாவது ஒரு இடத்தில் நமக்கு உதவியாக இருப்பது தெரியும், அதேப்போல் தான் இந்த முத்தமும். ஒருவரின் பார்வைகளுக்கு எப்படி அர்த்தங்கள் மாறுபட்டு மற்றவருக்கு நெருடலாக தொடர்ந்து முத்தத்திற்கான அர்த்தங்களும் பார்வைகளும் மாறுபடுக்கின்றன. ஒரு சின்ன குழந்தைக்கு முத்தமிட்டு பாருங்கள் அது சிரித்து கொண்டே சுவரில் அடித்த பந்து போல நம்மிடமே திருப்பி அனுப்பும் அதே, வயசு பொண்ணுக்கு கொடுத்தால் பளீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........! முத்தத்திற்கான மதிப்புகள் நம்மிடையே நிறைய வேற்றுமைகளை கொண்டுள்ளன, பழைய காலத்தில் பாசத்திற்கான அடையாளமாக தான் முத்தத்தை பகிர்ந்து கொண்டனர், அந்த பகிர்தலே நாளடைவில் காலத்தின் கட்டயத்தால் காதலாக மாறி தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் எல்லோரையும் (நீச்சல் தெரிந்தவர்கள் உட்பட) மூழ்கியே முத்தத்தை கொன்றுவிட்டது. உண்மையிலே முத்தத்திற்கு மட்டும் வாய் இருந்தால் இந்த காதலை திட்டியே தூக்கு போட வைத்திருக்கும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு முத்தத்தை தனி பட்ட ஒருவரின் அங்கீகாரமாக ஏன் உரிமையாக கூட வைத்து கொண்டு வாழ்கின்றனர்_________(இந்த இடத்தில் ஒரு கெட்ட வார்த்தை போட்டு கொள்ளுங்கள்) காதலர்கள். அம்மாவின் முத்தம், அப்பாவின் முத்தம், சகோதர முத்தம், நண்பர்களின் முத்தம் இவையெல்லாம் நமக்கு தருவது என்ன பொய்யா...? என்று உங்கள் மனதில் ஒரு அடிக்கோட்டிட்டு கேட்க தோன்றும். அவையெல்லாம் பொய் என்றால் இந்த உலகில் முத்தம் என்பதே அகராதியில் தொலைந்த ஒரு வார்த்தையை தேடி பிடிப்பதை போல, கடலின் ஆழத்தில் தேடும் சத்தத்தை போல, ஏன் தொலைந்துபோன ஒரு உலகத்தை தேடி அலைவது போல தான் அவர்கள் முத்தம், அவை என்றுமே பொய்யாக இருப்பதில்லை. உண்மையான முத்தத்திற்கு முன்னால் கண்ணாடி வைத்து பார்த்தால் அதில் அவர்களுடைய முகத்தை மட்டும் தான் பார்க்கமுடியும். சகோதர சகோதரிகள் & நண்பர்கள் யாரையாவது காதலிக்காமல் இருக்கும் வரை தான் இந்த முத்தங்கள் நமக்கு தேனாக இருக்கும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்தால் அந்த முத்தங்கள் எல்லாம் பாகற்காய் போல மாறிவிடும் (உங்களுக்கு தெரியுமா நான் அனுபவித்து உள்ளேன்...). ***நீங்கள் முதலில் யாருக்காவது முத்தம் கொடுத்து உள்ளிர்களா...! அல்லது முத்தம் வாங்கி உள்ளிர்களா...!. அதுவொரு மாதிரி உடல் சிலிர்த்து மனம் பூரித்து தனக்குளே நடக்கின்ற தன்னாட்சி.... அதை உங்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன் ***. மிருகங்கள் கூட அன்பை வெளிபடுத்த முத்தத்தை பரிமாறி கொள்கின்றன நம்மை போலவே, அவைகளுக்குள் ஈகோ இருகிறதா என்று எனக்கு தெரியாது காதலர்களுக்குள் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். கோபத்திற்கும் முத்தத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு, உங்கள் காதலருடன் தொலைபேசியில் பேசும்போது ஒரு சின்ன குழந்தைக்கு முத்தமிட்டு பாருங்கள் அப்போது புரியும்...! முடிந்தளவுக்கு முத்தத்தை நெற்றியில் கொடுத்து பழகுங்கள் ஏனென்றால் உண்மைகள் எப்போதும் உயரத்தில் இருந்த படியே தான் பேசும் குற்றங்கள் உருவாவதற்கு காரணம் நாம் நம் மனநிலையை எப்போதும் கீழே வைத்திருப்பதால் தான்.
குழந்தையாக இருக்கும் வரை தான் நமக்கு முத்தங்கள் சொந்தம், நாம் வளர்த்த பிறகு முத்தங்கள் சொந்தம் தான் வேறு யாருக்கோ. காதலர்கள், தனக்கு மட்டுமே முத்தம் "சொந்தம்" என்று எண்ணுவது உங்கள் மனநிலை பொறுத்த வரை சரி தான் ஆனால் மற்றவர்களுடைய கண்ணிற்கு நீங்கள் காட்சி தருவது...? பேருந்தில் நீங்கள் உட்கார்ந்துக்கொண்டு சில்லறைக்காக நடத்துனரிடம் சண்டை பிடிப்பது. உட்கார்ந்து இருக்கிற உங்களுக்கே சில்லறை பாக்கி...? அப்போ எங்களுக்கெல்லாம்...! இதை போல தான் அவர்களின் மனநிலை இருக்கும் என்று உங்களுக்கு தோன்றாது காரணம், நாம எப்பவுமே நமக்கான சாப்பாடு இருக்கா, தூங்க இடம் இருக்கா அத்தோடு நம்மளோட பார்வைக்கோணம் முடிஞ்சி போய்டுது. இதுல இருந்து வெளிய வரணும்னா நாம அடிப்படைல இருந்து மாறனும். அது என்ன அடிப்படைனு கேட்கிறீர்களா அதை இன்னொரு கட்டுரையின் இடையில் எழுதுறேன்.

காதலியுங்கள் நமக்காக தான் காதல் பிறந்ததது, இந்த உலகில் எல்லாமே காதலால் தான் இயங்குகிறது என்று சொல்லி கொள்ளுங்கள். ஆனால் முத்தம், அனைவருக்காக இயற்ற பெற்ற செய்யுள் என்று உணர்த்து கொள்ளுங்கள். முத்தம் ஒரு பொதுவுடமைவாதி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய இசை.
சிறுவயதில் இருந்தே நான் அனைவரிடமும் பெற்றுக்கொண்ட சுவடுகளாய் எனக்குள்ளிருந்த முத்தத்தின் ஓசையாக, ஓசையின் எழுத்தாக இப்போது உங்களுடன். இவண் மாயாவி.