வெள்ளி, 4 மே, 2012

மௌனம்

உன்னிடம்
பேச தயங்கும் எனக்கு
பேச தெரிந்த
ஒரே மொழி
மௌனம்

வியாழன், 3 மே, 2012

தெரியவில்லை..?

எதுவுமே 
புரியாத எனக்கு
உன் பெயரின்
காதல் மட்டும் 
எப்படி புரிந்தது..! 

புதன், 2 மே, 2012

கிடைத்தது

காதலில் விழுந்தேன் 
கவிதை கிடைத்தது.,
கவிதையில் விழுந்தேன் 
காதலி கிடைத்தால்.....!

திங்கள், 30 ஏப்ரல், 2012

பொய் = உண்மையாக

நான்
உன்னிடம் சொல்லும்
பொய்கள் எல்லாம்
ஒரு நாள் அல்ல ஒரு நாள்
என்னையே காதலிக்கிறது
கவிதையாக...!

மௌனம்

உன்
மௌன நிலையங்களில்
என்
காதல் சொற்பொழிவு...!