புதன், 22 ஆகஸ்ட், 2012

கடவுளை திற.... மனிதனை உட்புகு....

கோடான கோடி மக்களில் எத்தனை சதவீதம் மனிதனை மனிதனாக பார்க்கிறார்கள் என்று கூற முடியுமா...! முடியாது. ஏனென்றால் மனிதனை விட இவர்களுக்கு கற்சிலைகளின் ஆதிக்கம் தம் மீது அதிகமாக படர்திருக்கிறது என்ற எண்ணம் தான். கடவுள் பெயரை சொல்லி சொல்லியே ஆறறிவு பெற்ற மனிதனை ஐந்தரிவாக மாற்றுவதே இந்த உலகில் பதிந்துள்ள புரியாத தடமாக மாறியுள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களைவிட கடவுளை நம்புங்கள் உங்களை ஆசீர்வதிப்பார், சாப விமோச்சனம் தருவார், சகல செல்வங்களையும் உங்களை தேடி வரவழைப்பார் என்று சொல்லி அலைபவர்களே அதிகம். நம் முன்னோர்கள், செய்து வைத்த காலத்தின் பிடியிலிருந்து இவர்கள் கை நழுவாமல், அவர்களின் கையை கோர்த்துக் க்கொண்டு அலைவது தான் இதற்கெல்லாம் காரணம். முன்னோர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடப்பது முக்கியம் தான், யாரும் இல்லையென்று சொல்லவில்லை அதற்காக வாயில் அலகு குத்துவது, உடம்பில் கம்பியை குத்தி அந்தரத்தில் பறப்பது, மண்டையில் தேங்காய் உடைப்பது இன்னும் என்னென்ன வேண்டுதல் இருக்கிறதோ அதை எல்லாத்தையும் விட்டு வைக்காமல் செய்து வருவது தான் மூட தனமாக இருக்கிறது, இதை தான் நமக்கு முன்னோர்கள் கற்றுக் கொடுத்தார்களா..? என்று கேளுங்கள். பரம்பரை பரம்பரையாக, வாழையடி வாழையாக சாமிக்கு நாம செய்யுற தொண்டு அதை எப்பவும் மாத்திக்க கூடாதுன்னு சொல்லி, கடவுள் மேல நமக்கு கோவம் வரும்படி ஆக்கிவிடுவார்கள், இவர்களால் தான் நாமும் முன்னோர்களை வஞ்சிக்கும்படி ஆகிறது. 

சாமிக்கு விரதம் இருக்கும்போது மட்டும் ஒரு பிச்சைகாரனை கூட்டிட்டு வந்து வாலைப் போட்டு தட புடலாக சாப்பாடு வைத்து அனுப்புவார்கள், அதே பிச்சைகாரன் அடுத்த நாள் அந்த வீடிற்கு சென்றால் போடா போடான்னு சொல்லி துரத்துவார்கள். நீங்கள் சொல்லலாம் தினமும் படி அளக்க எங்ககிட்ட மானியம் இல்லைன்னு அப்புறம் எதுக்கு அந்த ஒரு நாள் மட்டும் கூப்டு கூப்டு விருந்து வைக்கணும் அப்படி வச்சதுனால தான அவன் அடுத்த நாளும் வரான். எந்த சாமி இப்படிலாம் பண்ண சொன்னுசினு தெரியல அது மட்டும் தெரிஞ்சா உண்மையிலே நானும் கும்பாபிஷேகம் நடத்துவேன். எனக்கு தெரிஞ்சா வரைக்கும் எல்லா வேதங்களிலும் இருக்குறவன் இல்லாதவனுக்கு தரணும்னு தான் சொல்லிருக்கு, ஆனா நம்மகிட்ட அந்த எண்ணமே கொஞ்சம்கூட கிடையாது. நமக்கு இருக்கா அடுத்தவன் எப்படி போன என்ன என்ற நினைப்பில் தான் வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த எண்ணம் மட்டும் இல்லாமல் இருந்தால்.............? 

பெரியார் சொல்லி திருந்தாத நீங்க நான் சொல்லிய திருந்த போறீங்க.... நீங்கள் கொஞ்ச நாள் மட்டும் உங்களுக்குள்ளே இருக்கிற கடவுளை திறந்து வெளிய விட்டுட்டு நீங்க மனிதனை உங்கள் மனதில் வைத்து பாருங்கள், அப்போது தான் இந்த வாழ்க்கைக்கான அர்த்தம் புரியும். தயவுசெய்து இல்லாத ஒருவன் இருக்கின்ற உங்களிடம் கை ஏந்தினால் உங்களால் முடிந்த நன்மையை செய்யுங்கள், உதவி கரம் நீட்டுங்கள்.... அப்போது நீங்களும் கடவுளாக பார்க்க படுவீர்கள்....

கடவுளை மற மனிதனை நினை.....