வெள்ளி, 25 மே, 2012

காதலர்கள் மட்டும் தான் முத்தம் தர வேண்டுமா...!

முத்தம். பிறந்ததிலிருந்து இறப்பதற்குள் நாம் கட்டாயம் தொட வேண்டிய ஒரு அழகான பயணம். ஒவ்வொரு பயணத்திலும் நாம எதையாவது ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறோம். எதை கற்றுக்கொண்டோம் என்பது நமக்கு அதை கற்றுக்கொள்ளும்போது புரியாது கற்றுக்கொண்ட பின்னர் தான் எதாவது ஒரு இடத்தில் நமக்கு உதவியாக இருப்பது தெரியும், அதேப்போல் தான் இந்த முத்தமும். ஒருவரின் பார்வைகளுக்கு எப்படி அர்த்தங்கள் மாறுபட்டு மற்றவருக்கு நெருடலாக தொடர்ந்து முத்தத்திற்கான அர்த்தங்களும் பார்வைகளும் மாறுபடுக்கின்றன. ஒரு சின்ன குழந்தைக்கு முத்தமிட்டு பாருங்கள் அது சிரித்து கொண்டே சுவரில் அடித்த பந்து போல நம்மிடமே திருப்பி அனுப்பும் அதே, வயசு பொண்ணுக்கு கொடுத்தால் பளீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........! முத்தத்திற்கான மதிப்புகள் நம்மிடையே நிறைய வேற்றுமைகளை கொண்டுள்ளன, பழைய காலத்தில் பாசத்திற்கான அடையாளமாக தான் முத்தத்தை பகிர்ந்து கொண்டனர், அந்த பகிர்தலே நாளடைவில் காலத்தின் கட்டயத்தால் காதலாக மாறி தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் எல்லோரையும் (நீச்சல் தெரிந்தவர்கள் உட்பட) மூழ்கியே முத்தத்தை கொன்றுவிட்டது. உண்மையிலே முத்தத்திற்கு மட்டும் வாய் இருந்தால் இந்த காதலை திட்டியே தூக்கு போட வைத்திருக்கும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு முத்தத்தை தனி பட்ட ஒருவரின் அங்கீகாரமாக ஏன் உரிமையாக கூட வைத்து கொண்டு வாழ்கின்றனர்_________(இந்த இடத்தில் ஒரு கெட்ட வார்த்தை போட்டு கொள்ளுங்கள்) காதலர்கள். அம்மாவின் முத்தம், அப்பாவின் முத்தம், சகோதர முத்தம், நண்பர்களின் முத்தம் இவையெல்லாம் நமக்கு தருவது என்ன பொய்யா...? என்று உங்கள் மனதில் ஒரு அடிக்கோட்டிட்டு கேட்க தோன்றும். அவையெல்லாம் பொய் என்றால் இந்த உலகில் முத்தம் என்பதே அகராதியில் தொலைந்த ஒரு வார்த்தையை தேடி பிடிப்பதை போல, கடலின் ஆழத்தில் தேடும் சத்தத்தை போல, ஏன் தொலைந்துபோன ஒரு உலகத்தை தேடி அலைவது போல தான் அவர்கள் முத்தம், அவை என்றுமே பொய்யாக இருப்பதில்லை. உண்மையான முத்தத்திற்கு முன்னால் கண்ணாடி வைத்து பார்த்தால் அதில் அவர்களுடைய முகத்தை மட்டும் தான் பார்க்கமுடியும். சகோதர சகோதரிகள் & நண்பர்கள் யாரையாவது காதலிக்காமல் இருக்கும் வரை தான் இந்த முத்தங்கள் நமக்கு தேனாக இருக்கும் அவர்கள் காதலிக்க ஆரம்பித்தால் அந்த முத்தங்கள் எல்லாம் பாகற்காய் போல மாறிவிடும் (உங்களுக்கு தெரியுமா நான் அனுபவித்து உள்ளேன்...). ***நீங்கள் முதலில் யாருக்காவது முத்தம் கொடுத்து உள்ளிர்களா...! அல்லது முத்தம் வாங்கி உள்ளிர்களா...!. அதுவொரு மாதிரி உடல் சிலிர்த்து மனம் பூரித்து தனக்குளே நடக்கின்ற தன்னாட்சி.... அதை உங்களுக்கு சொன்னால் புரியுமா என்று தெரியவில்லை அதனால் தான் கேட்கிறேன் ***. மிருகங்கள் கூட அன்பை வெளிபடுத்த முத்தத்தை பரிமாறி கொள்கின்றன நம்மை போலவே, அவைகளுக்குள் ஈகோ இருகிறதா என்று எனக்கு தெரியாது காதலர்களுக்குள் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரியும். கோபத்திற்கும் முத்தத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு, உங்கள் காதலருடன் தொலைபேசியில் பேசும்போது ஒரு சின்ன குழந்தைக்கு முத்தமிட்டு பாருங்கள் அப்போது புரியும்...! முடிந்தளவுக்கு முத்தத்தை நெற்றியில் கொடுத்து பழகுங்கள் ஏனென்றால் உண்மைகள் எப்போதும் உயரத்தில் இருந்த படியே தான் பேசும் குற்றங்கள் உருவாவதற்கு காரணம் நாம் நம் மனநிலையை எப்போதும் கீழே வைத்திருப்பதால் தான்.

குழந்தையாக இருக்கும் வரை தான் நமக்கு முத்தங்கள் சொந்தம், நாம் வளர்த்த பிறகு முத்தங்கள் சொந்தம் தான் வேறு யாருக்கோ. காதலர்கள், தனக்கு மட்டுமே முத்தம் "சொந்தம்" என்று எண்ணுவது உங்கள் மனநிலை பொறுத்த வரை சரி தான் ஆனால் மற்றவர்களுடைய கண்ணிற்கு நீங்கள் காட்சி தருவது...? பேருந்தில் நீங்கள் உட்கார்ந்துக்கொண்டு சில்லறைக்காக நடத்துனரிடம் சண்டை பிடிப்பது. உட்கார்ந்து இருக்கிற உங்களுக்கே சில்லறை பாக்கி...? அப்போ எங்களுக்கெல்லாம்...! இதை போல தான் அவர்களின் மனநிலை இருக்கும் என்று உங்களுக்கு தோன்றாது காரணம், நாம எப்பவுமே நமக்கான சாப்பாடு இருக்கா, தூங்க இடம் இருக்கா அத்தோடு நம்மளோட பார்வைக்கோணம் முடிஞ்சி போய்டுது. இதுல இருந்து வெளிய வரணும்னா நாம அடிப்படைல இருந்து மாறனும். அது என்ன அடிப்படைனு கேட்கிறீர்களா அதை இன்னொரு கட்டுரையின் இடையில் எழுதுறேன்.

காதலியுங்கள் நமக்காக தான் காதல் பிறந்ததது, இந்த உலகில் எல்லாமே காதலால் தான் இயங்குகிறது என்று சொல்லி கொள்ளுங்கள். ஆனால் முத்தம், அனைவருக்காக இயற்ற பெற்ற செய்யுள் என்று உணர்த்து கொள்ளுங்கள். முத்தம் ஒரு பொதுவுடமைவாதி, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய இசை. 

சிறுவயதில் இருந்தே நான் அனைவரிடமும் பெற்றுக்கொண்ட சுவடுகளாய் எனக்குள்ளிருந்த முத்தத்தின் ஓசையாக, ஓசையின் எழுத்தாக இப்போது உங்களுடன். இவண் மாயாவி.

புதன், 23 மே, 2012

கோள்

நடமாடும் அல்ல
நடனமாடும்
இரு நிலவுகளை
கொண்ட
ஒரே கோள்
அவள்...

திங்கள், 21 மே, 2012

அவஸ்தை

அவன் வரும்வரை
தவிக்கிறது என் இதயம்.,
இன்றாவது என் காதல்
அவனுடன் வருகிறதா
என்ற அவஸ்தையில்...!

சதுரங்கம்

கண்ணும் கண்ணும்
விளையாடுகிறது
காதல் சதுரங்கம்...

இடைவெளியே

நீயும் நானும்
இடைவெளி விட்டு
தானே பேசுகிறோம்..
இடைவெளியே இல்லாத
நம் காதலை பற்றி...

கண் சிமிட்டு

அவன் கேமராவில்
படமெடுக்கும் போதெல்லாம்
நான் கண் சிமிட்டுவேன்.,
அப்படியாவது 
அவன் முன்னாடி
கண் சிமிட்டுகிறோமேஎன்ற ஆசையில்..

ஒட்டிகொள்கிறது...!

உனக்காக நான் எழுதும்
கவிதைகள் அனைத்தும் 
யாரோ ஒருவரின்
இதயத்தில்
ஒட்டிகொள்கிறது...!

உடைக்கப்படுகிறது..!

பூட்டை.
சாவி தான் திறக்கிறது,
சில சமயம் 
சாவியே 
பூட்டை உடைக்கிறது...!

மொழி பெயர்ப்பு

ஆங்கில கவிதைகளை
மொழிப் பெயர்த்தால்
உன் பெயராகிறது..
உன் பெயரை
மொழிப் பெயர்த்தால்
என்னை தவிர
வேறு யாருக்கும் புரியாத
கவிதையாகிறது...!

உன் காதல்

உனக்காக ஒரு
கவிதை எழுதினேன்,
கவிதையில் தெரிந்தது
என் இதயம்
அதில் துடிப்பதோஉன் காதல்...

எங்கு பிறந்தது காதல்

காதலுக்கான மொழி
எங்கு பிறந்தது,
யாருக்காவது தெரியுமா..?
எனக்கு தெரியும்.
ஊமையனிடம் பிறந்ததே
மௌனமாக...!

காதல்..!

எத்தனை முறை
பிறந்தாலும்
சிரித்து கொண்டே
பிறப்பது தான்
காதல்..!

கவிதா

என்
-விதையின்
வி-தை
தா-ன்
அவள்.,
மணி மணியாய்
பூக்கிறது 
எனக்குள்ளே
காதலும் கவிதையும்...!

தேவி

என்
தே-டலுக்கான
வி-டை தான் 
அவள்...

காற்று

உனக்காக பிறந்து
உன்னுள் கலந்து
உன்னாலே இறக்கும்
உன் சுவாச காற்றாய்
நானடி...!

காதல்

கனவிலும் நினைவிலும்
நீயே வருவதால் தான்
கண்களும் உன் மீது
காதல் கொண்டதோ...
{என் தோழி தேவி எழுதியது....}

பொய்யாக

உண்மையாய்
இருந்த என் வீட்டில்
இப்போது
பொய்யாக நான்...

காதல்

விழிகளாலே
விதையில்லாமல்
பூக்கும் பூக்கள்...!

ஏனோ

விடுப்பு கடிதம்
எழுத நினைக்கையில்
உன் நினைவு வந்தால்
காதல் கடிதமாக மாறுவது ஏனோ....

சிறை

வரிகளை அமைக்க வாக்கியத்தை தேடினேன்,
வாக்கியத்தை அமைக்க வார்த்தையை தேடினேன்,
வார்த்தையை அமைக்க சொற்களை தேடினேன்,
சொற்களை தேடி புதிய பிரபஞ்சத்தில் இறங்கினேன்,
பிரபஞ்சத்தில் வழி தெரியாமல் மாட்டிக்கொண்டேன்
சொற்களின் சிறையில்...!

காதலின் கற்பனை



நான் எடுத்துள்ள ஆறாவது குறும்படம். இதுவரை எடுத்த படங்களை இனிமேல் தான் பதிவு செய்வேன். இந்த படம் எனக்கு பிடித்த படம், காரணம் இந்த படத்தில் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தின் கூட்டணி மொத்தம் நான்கு பேர் மட்டுமே. நடிப்பு, அனிமேஷன், கேமரா மற்ற வேலைபாடுகளை எல்லாம் பார்த்தது நான் மட்டும், நான் தற்பெருமைக்காக  சொல்ல வில்லை வேறு யாரும் உதவிக்கு வரவில்லை என்ற ஆதங்கத்தில்  தான் கூறுகிறேன். இந்த படத்தை எனக்கு படமாக எடுக்க தோன்றியது கன்னியாகுமரி புத்தகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு இடத்தில் எழுதி இருப்பார் அவள் தோழிகளுடன் அங்கு இல்லை என்று அந்த ஒரு வார்த்தையை மையமாக கொண்டு தான் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
படம் முழுக்க ஒருவரை மட்டும் வைத்து படம் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு தோன்றியது அதற்கு தான் இந்த படம். இது ஒரு காதல் படம். எனக்கு காதல் படம் எடுக்க விருப்பம் இல்லை ஆனால் எனக்கு கிடைத்த ஆட்கள் மற்றும் பண செலவுகள் இவற்றையெல்லாம் மனதில் வைத்து தான் நான் இந்த காதல் படத்தை எடுக்க வேண்டிய நிலைஇந்த படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை, ஏனென்றால் இதுவரை காதல் படங்களுக்கு எத்தனையோ தலைப்புகளை வைத்துள்ளனர் அதனால் தான் இந்த படத்திற்கு தலைப்பே வைக்கவில்லை. நீங்கள் யாரையாவது காதலித்திருந்தால் அதோட வலி, கோவம் இதெல்லாம் உங்களுக்கு புரியும் அதும் காதலை சொல்லாமல் இருந்தால் நமக்கு எப்படி இருக்கும், அந்த சொல்லாத காதலை தான் எனக்கு பிடித்த முறையில் வீடியோவாக கிறுக்கியுள்ளேன் நண்பர்களே... நீங்கள் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் அப்போது தான் என் அடுத்த படத்தில் அதை திருத்தி கொள்ள முடியும், உங்கள் கருத்துகளை சரியோ, தவறோ மறக்காமல் குறிப்பிடவும் இப்படிக்கு உங்கள் கருத்தை கேட்டு என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கும் மாயாவி.